இரண்டாவது குழுவில் 13 பணயக் கைதிகளையம் விடுவித்தது ஹமாஸ்


உயிருள்ள 13 பணயக்கைதிகள் கொண்ட இரண்டாவது குழு இஸ்ரேலை அடைந்துள்ளது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

திங்களன்று விடுவிக்கப்பட்ட இரண்டாவது பிணைக் கைதிகள் குழு 13 பேர் இஸ்ரேலை அடைந்துள்ளது. அதாவது காசா பகுதியில் ஹமாஸால் பிடிக்கப்பட்டிருந்த 20 உயிருள்ள பிணைக் கைதிகளும் இப்போது திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்கள் திரும்பி வந்ததும் ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டைப் பெறுவார்கள் என்று அது கூறியது.

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் விரைவில் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவார்கள் என்று ஐ.டி.எஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை முன்னதாக ஏழு பணயக்கைதிகள் கொண்ட முதல் குழு விடுவிக்கப்பட்டது.           

விடுவிக்கப்பட்டு பணயக்கைதிகள் அனைவரும் பாலஸ்தீன பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்திருந்தது.   

# hostages 

No comments